‘டிகே’ வால் பேட்டிங் வரிசையில் என்னுடைய இடத்திற்கே ஆபத்து வந்துவிட்டது : சூர்யகுமார் யாதவ்!

Updated: Wed, Oct 05 2022 16:07 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு புரோமோஷன் வழங்கப்பட்டு, 4ஆவது இடத்தில் களமிறங்கினார். நேற்றைய ஆட்டத்தில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசிய தினேஷ் கார்த்திக், 21 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார். 

ஆனால் 5ஆவது இடத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில், தொடர்ந்து கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் சூர்யகுமாருக்கு ஓய்வு வழங்காமல், சீனியார்ட்டி அடிப்படையில் ராகுலுக்கு இந்திய அணி நிர்வாகம் ஓய்வு வழங்கியது. 

இதனிடையே, நேற்று போட்டிக்கு பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ், “தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார். தினேஷ் கார்த்திக்கிற்கு பேட்டிங் செய்ய பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் , அவர் களத்தில் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக அவருக்கு பேட்டிங் வரிசையில் புரோமோஷன் வழங்கப்பட்டது. ஆனால், அவர் ஆடிய ஆட்டத்தை பார்த்த பிறகு, பேட்டிங் வரிசையில் என்னுடைய இடத்திற்கே ஆபத்து வந்துவிட்டது என்று கருதினேன்.

நானும், தினேஷ் கார்த்திக்கும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட வேண்டும் என்பதே திட்டம். ஆனால் நாங்கள் நினைத்து நடக்கவில்வை. நான் விரைவில் ஆட்டமிழந்துவிட்டேன். ஒரே ஆண்டில் 50 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தது குறித்து சூர்யகுமாரிடன் கேள்வி கேட்கப்பட்டது. அது குறித்து தமக்கு தெரியாது.

இது போன்ற புள்ளி விவரங்களை நான் பார்ப்பதில்லை. ஆனால் என் நண்பர்கள் எனக்கு இதனை வாட்ஸ் ஆப்பில் அனுப்புவார்கள். சிக்சர் அடிப்பது டி20 கிரிக்கெட்டின் தேவை. மற்ற படி புள்ளி விவரங்களை பார்த்து விளையாடுவது இல்லை. நாம் எப்போதும் ஒரே மாதிரி தான் தயாராகி , ஆட்டத்தை எதிர்கொள்கிறேன். நான் மகிழ்ச்சியுடன் விளையாட நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை