என் வாழ்க்கையில் பார்த்த சிறந்த ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் இதுதான் - சச்சின் டெண்டுல்கர்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கவே முடியாத அளவிற்கு தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கிளன் மேக்ஸ்வெல்லிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. மும்பை வான்கடேவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா – ஆஃப்கானிஸ்தான் இடையேயான டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இப்ராஹிம் ஜார்டன் 129 ரன்களும், ரசீத் கான் 35 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெறும் 91 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்ததால், இந்த வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு சாத்தியமே இல்லை என்றே கருத்தப்பட்ட. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், 9வது விக்கெட்டிற்கு களமிறங்கிய கம்மின்ஸுடன் கூட்டணி சேர்ந்து உலகத்தரம் வாய்ந்த பேட்டிங்கை வெளிப்படுத்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக மிக சிறந்த ஒரு இன்னிங்ஸை வெளிப்படுத்தினார்.
சரியாக நடக்கவோ, கால்களை அசைக்கவோ, ஓடாவோ முடியாத நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்காக அதீத நம்பிக்கையுடன் போராடிய கிளன் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 10 சிக்ஸர் மற்றும் 21 பவுண்டரிகளுடன் 201 ரன்களும் எடுத்து வரலாறு படைத்ததோடு ஆஸ்திரேலிய அணிக்கு 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்று கொடுத்தார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் கிளன் மேக்ஸ்வெல் விளையாடிய விதம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. கிளன் மேக்ஸ்வெல்லின் இந்த பேட்டிங்கை அனைவரும் வெகுவாக புகழ்ந்து பேசி வருகின்றனர். அதே போல் ரசிகர்களும் கிளன் மேக்ஸ்வெலை சமூக வலைதளங்கள் மூலம் புகழ்ந்து பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் (X) பக்கத்தில், "ஜத்ரானின் மிகச்சிறந்த சதத்தால் ஆஃப்கானிஸ்தான் அணி சிறந்த இலக்கை நிர்ணயித்தது. சிறப்பாக தொடங்கியதோடு, 70 ஓவர்கள் வரை மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடியது ஆஃப்கானிஸ்தான். ஆனால் ஆஸ்திரேலியாவின் தலைவிதியை மாற்ற மேக்ஸ்வெல்லுக்கு கடைசி 25 ஓவர்கள் போதுமானதாக இருந்தது. என் வாழ்க்கையில் பார்த்த சிறந்த ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் இதுதான்" என்று பாராட்டியுள்ளார்.