இந்திய அணி மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்த டிம் பெயின்!

Updated: Sat, May 15 2021 10:26 IST
Image Source: Google

கடந்தாண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடியது. இதில் ஒரு நாள் தொடரை 1-2 என தோற்ற இந்திய அணி, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

அதன்பின் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமாகத் தோற்றது இந்திய அணி. பிறகு மெல்போர்ன் டெஸ்டை வென்றது. சிட்னியில் நடைபெற்ற 3ஆவது டெஸ்டைக் கடுமையாகப் போராடி டிரா செய்தது. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 4ஆவது டெஸ்டில் கடினமான இலக்கை 5ஆம் நாளில் விரட்டி பிரிஸ்பேன் டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியது. 

டெஸ்ட் தொடர் தோல்வி பற்றி ஒரு விழாவில் ஆஸி. கேப்டன் டிம் பெயின் கூறுகையில்,  “இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதில் உள்ள சவாலே அவர்கள் உங்களுக்குத் தொல்லை ஏற்படுத்தி தேவையில்லாத விஷயங்களில் கவனத்தை சிதற விடுவார்கள். டெஸ்ட் தொடரில் அந்த வலையில் நாங்கள் விழுந்துவிட்டோம். சிறந்த உதாரணம், அவர்கள் பிரிஸ்பேனுக்குச் செல்ல மாட்டோம் என்றார்கள். இதனால் நாங்கள் எங்கு செல்ல போகிறோம் என்பதை அறியாமல் இருந்தோம். இதுபோன்ற கவனச்சிதறலை நன்கு உருவாக்குவார்கள். அதனால் எங்கள் கவனம் பந்தை விட்டு விலகி விட்டது என்றார்.

பிரிஸ்பேனில் கரோனா விதிமுறைகள் கடுமையாக இருந்ததால் அங்கு விளையாட இந்திய அணி முதலில் தயக்கம் காட்டியது. எனினும் அங்குச் சென்று விளையாடி, வரலாற்று வெற்றியை அடைந்தது. 1988 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிறகு பிரிஸ்பேனில் ஆஸி. அணியைத் தோற்கடித்த பெருமையைப் பெற்றது” என்று தெரிவித்தார்.

இந்திய அணி மீதான டிம் பெயினின் விமர்சனம் சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றது. இந்திய ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் டிம் பெயினை விமர்சித்துப் பதிவுகள் வெளியிட்டனர்.

இதற்கு விளக்கமளித்துள்ள பெயின்,“இந்திய வீரர்களைப் பற்றி குறை மட்டும் கூறவில்லை. அவர்கள் சிறப்பாக விளையாடி எங்களை வீழ்த்தினார்கள், அதனால் அந்த வெற்றிக்குத் தகுதியானவர்கள் என்றும் நான் கூறியுள்ளேன். இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் என்னை அதிகமாக விமர்சித்துள்ளார்கள். நான் சாக்குப்போக்கு கூறுவதாகக் கருதுகிறார்கள். எல்லாமே வேடிக்கையாக உள்ளன” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை