டிஎன்பிஎல் 2021: திருச்சி பந்துவீச்சில் 77 ரன்களில் சுருண்ட நெல்லை!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய அமித் சத்விக் 71 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதிலும் 14ஆவது ஓவரை வீசிய மதிவாணன் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதனால் 13.4 ஓவர்களிலேயே நெல்லை ராயல் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த அமித் சத்விக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.