டிஎன்பிஎல் 2021: சாய் கிஷோர் சுழலில் சின்னாபின்னமான திண்டுக்கல்!

Updated: Sun, Aug 01 2021 23:11 IST
Image Source: Google

டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதையடுத்து களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. அந்த அணியில் கௌஷிக் காந்தி 45 ரன்களையும், ஜெகதீசன் 40 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு கேப்டன் ஹரி நிஷாந்த் - அருண் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. பின் அருண் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஸ்ரீநிவாசனும் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ஹரி நிஷாந்தும் 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சா கிஷோர் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. சேப்பாக் அணி தரப்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை