டிஎன்பிஎல் எலிமினேட்டர் : திண்டுக்கல் டிராகன்ஸ் vs லைகா கோவை கிங்!

Updated: Wed, Aug 11 2021 11:56 IST
TNPL 2021 Eliminator : Dindigul Dragons Faces off Lyca Kovai Kings
Image Source: Google

டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் vs லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதிபெறும். அதேசமயம் தோல்வியடையும் அணி நான்காம் இடத்தப் பிடிக்கும்..

நடப்பு சீசனில் ஷாரூக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளது. அதிலும் அந்த அணியில் சாய் சுதர்சன், கங்கா ஸ்ரீதர் ராஜு, சுரேஷ் குமார் ஆகியோர் தொடர்ந்து பேட்டிங்கில் அசத்தி வருவது அணியின் வெற்றிக்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 

அதேசமயம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் ஆரம்பத்தில் சில தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அந்த அணி சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ஹரிநிஷாந்த், மணி பாரதி ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக உள்ளது அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. 

உத்தேச அணி 

லைகா கோவை கிங்ஸ் : கங்கா ஸ்ரீதர் ராஜு, ஜே.சுரேஷ் குமார், சாய் சுதர்சன், முகிலேஷ், ஷாருக் கான் (கே), செல்வ குமரன், அபிஷேக் தன்வார், அஜித் ராம், அதீக் உர் ரஹ்மான், ஆர் திவாகர், வள்ளியப்பன் யுதீஸ்வரன்.

திண்டுக்கல் டிராகன்ஸ்: ஹரி நிஷாந்த் (கே), மணி பாரதி, ராஜமணி சீனிவாசன், ஆர் விவேக், எம் சிலம்பரசன், எஸ் சுவாமிநாதன், சுரேஷ் லோகேஷ்வர்  மோகித் ஹரிஹரன், குர்ஜப்னீத் சிங், ரங்கராஜ் சுதேஷ், லட்சுமிநாராயணன் விக்னேஷ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை