டிஎன்பிஎல் 2021: சத்விக், ராஜகோபால் ஆபாரம்; கோவைக்கு 171 ரன்கள் இலக்கு!
ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வரும் டிஎன்பிஎல் தொடரின் 5ஆவது சீசல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 5ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடன் விளையாடி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அமித் சத்விக் ஒருமுனையில் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய முகுந்த் (14) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் சத்விக்குடன் ஜோடி சேர்ந்த ராஜகோபாலும் அதிரடி ஆட்டத்தை கையிலேடுத்தார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சத்விக் 42 ரன்களிலும், ராஜகோபால் 45 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் சுமந்த் ஜெய்ன், அந்தோணி தாஸ், சரவண் குமார் ஆகியோர் தங்கள் பங்கிற்கு சில பவுண்டரிகளை விளாச, 20 ஓவர்கள் முடிவில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களைச் சேர்த்தது. கோவை அணி தரப்பில் விக்னேஷ், செல்வ குமரன், அபிஷேக் தன்வர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.