டிஎன்பிஎல் 2021 : சேலம் ஸ்பார்டன்ஸ் vs நெல்லை ராயல் கிங்ஸ்!

Updated: Thu, Aug 05 2021 13:42 IST
Image Source: Google

டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்பாண்டு டிஎன்பிஎல் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வியைச் சந்தித்து, புள்ளிப்பட்டியலின் 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.  

அதேசமயம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி விளையாடிய அந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

இதனால் இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு  முன்னேறுவதற்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் ஒருவேளை சேலம் அணி தோல்வியடையும் பட்சத்தில் பிளே ஆஃப் வாய்ப்பை இலக்கவும் நேரிடலாம் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

உத்தேச அணி

நெல்லை ராயல் கிங்ஸ் : பாபா அபராஜித் (இ), லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், பிரதோஷ் ரஞ்சன் பால், பாபா இந்திரஜித், சஞ்சய் யாதவ், அர்ஜூன் மூர்த்தி, ஜிதேந்திர குமார், ஸ்ரீ நெரஞ்சன், என்எஸ் ஹரிஷ், திரிலோக் நாக், வி அதிசயராஜ் டேவிட்சன்.

சேலம் ஸ்பார்டன்ஸ் : எஸ் அபிஷேக், அக்‌ஷய் சீனிவாசன், டரில் ஃபெராரியோ (கே), விஜய் சங்கர், உமாசங்கர் சுஷில், முருகன் அஸ்வின், ரவி கார்த்திகேயன், எம் கணேஷ் மூர்த்தி, ஏவிஆர் ரத்னம், லோகேஷ் ராஜ், ஜி பெரியசாமி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை