சேலம்: டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சந்தோஷ் மற்றும் ரதி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Advertisement

டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை வென்ற நெல்லை அணி பந்துவீசுவதாக அறிவிக்க, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேலம் அணிக்கு ஹரி நிஷாந்த் மற்றும் கேப்டன் அபிஷேக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹரி நிஷாந்த் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.

Advertisement

இதில் அரைசதம் கடந்து அசத்திய ஹரி நிஷாந்த் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் விளையாடிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்க் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது 28 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே சேர்த்தது. நெல்லை அணி தரப்பில் சச்சின் ரதி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு சந்தோஷ் குமார் மற்றும் அஜித்தேஷ் குருஸ்வாமி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒருபக்கம் சந்தோஷ் குமார் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் அஜித்தேஷ் 3 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய நிர்மல் குமாரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அரைசதம் கடந்து அசத்திய சந்தோஷ் குமார் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 73 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

Also Read: LIVE Cricket Score

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிர்மல் குமார் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என் 37 ரன்களையும், ரித்திக் ஈஸ்வரன் 13 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 13.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பாட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நட்ப்பு டிஎன்பிஎல் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News