டிஎன்பிஎல் 2021: ஃபெராரியோ அதிரடியில் 165 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஸ்பார்டன்ஸ்!
டிஎன்பிஎல் தொடரின் இன்று நடைபெற்று வரும் 7ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பாடர்டன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற் சேலம் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அபிஷேக் - கோபிநாத் இணை சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. இதில் 16 ரன்களில் கோபிநாத் ஆட்டமிழக்க, 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அபிஷேக்கும் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய அக்ஷய் ஸ்ரீநிவாசன் 23, விஜய் சங்கர் 26 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய டேரில் ஃபெராரியோ அதிரடியாக விளையாடி 40 ரன்களைச் சேர்த்தார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது. இதைடடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி விளையாடி வருகிறது.