டிஎன்பிஎல் 2021: சுதர்சன், ஷாருக் கான் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த கோவை!
டிஎன்பிஎல் தொடரின் 13ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கோவை அணியின் தொடக்க வீரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜூ, சுரேஷ்குமார் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன் பின் களமிறங்கிய சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
பின்னர் 61 ரன்னிகளில் சுதர்சன் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாருக் கான் மைதானத்தில் வானவேடிக்கை காட்டினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஷாருக் கான் 28 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசி அரைசதத்தைக் கடந்தார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாருக் கான் 58 ரன்களைச் சேர்த்தார்.