டிஎன்பிஎல் 2021 : கோவை அணிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்த திருப்பூர்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் தற்போது நடைபெற்று வரும் 16ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய திருப்பூர் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் சித்தார்த் 11 ரன்களிலும், மான் பாஃப்னா 14 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த தினேஷ் - ஃபிரான்சிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் தினேஷ் 39 ரன்களில் ஆட்டமிழக்க, ஃபிரான்சிஸ் 38 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் களமிறங்கிய முகமது அதிரடியாக விளையாடி 33 ரன்களைச் சேர்த்து அணிக்கு உதவினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது. கோவை கிங்ஸ் அணி தரப்பில் அபிஷேக், முகிலேஷ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.