டிஎன்பிஎல் 2021: சத்விக் அதிரடியில் நெல்லை அணிக்கு 152 ரன்களை இலக்காக நிர்ணயித்த திருச்சி!

Updated: Wed, Jul 21 2021 21:31 IST
Image Source: Google

டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 3ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி கேப்டன் பாபா அபாரஜித் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இதற்கிடையில் மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. 

அதன்பின் இன்னிங்ஸைத் தொடங்கிய திருச்சி அணிக்கு அமித் சத்விக் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய முகுந்த் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ராஜகோபால் ரன் ஏதுமின்றியும் பெவிலியனுக்கு திரும்பினர்.

இருப்பினும் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சத்விக் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 52 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி 71 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.  

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆதித்யா கணேஷ் தனது பங்கிற்கு 33 ரன்களைக் குவிக்க , அந்தோனி தாசும் அபாரமாக விளையாடி 33 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்தது. நெல்லை அணி தரப்பில் ஷருன் குமார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை