டிஎன்பிஎல் 2022: திருச்சி வாரியர்ஸை வீழ்த்தி சேப்பார் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி!

Updated: Wed, Jul 06 2022 22:52 IST
Image Source: Google

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கவுசிக் காந்தி 19 ரன்களும், மற்றொரு துவக்க வீரர் ஜெகதீசன் 15 ரன்களும் சேர்த்தனர்.

அதன்பின்னர், திருச்சி பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடச் செய்த ராதாகிருஷ்ணன் 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் விளாசினார். உதிரசாமி சசிதேவ் 35 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 65 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர். திருச்சி தரப்பில் அஜய் கிருஷ்ணா, பொய்யாமொழி தலா 3 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு அமித் சாத்விக் - சந்தோஷ் ஷிவ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

இதில் சாத்விக் 33 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த சந்தோஷ் ஷிவ் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் 59 ரன்களில் சந்தோஷ் ஷிவ்வும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த நிரஞ்சன், நிதீஷ் ராஜகோபால் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை