டிஎன்பிஎல் 2022: திண்டுக்கல்லை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சேலம் ஸ்பார்ட்டன்ஸ்!

Updated: Sun, Jul 24 2022 23:22 IST
Image Source: Google

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. சேலத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி வீரர்கள் படுமோசமாக பேட்டிங் ஆடினர். ஃபெராரியோ மட்டும் தான் 38 ரன்கள் அடித்தார். அவரும் 36 பந்தில் 38 ரன்கள் தான் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்டன்ஸ் 124 ரன்கள் மட்டுமே அடித்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய ஆர் விவேக் மற்றும் சிலம்பரசன் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ஹரி நிஷாந்த் முதல் பந்திலேயே பெரியசாமியிடம் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த முகுந்த்தும் பெரியசாமியிடமே முதல் பந்தில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் வந்த மணி பாரதியும் 12 ரன்கள் எடுத்த நிலையில் பெரியசாமியிடமே விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விமல் குமார் 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதைத்தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது. 

சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி தரப்பில் பெரியசாமி 3 விக்கெட்டுகளையும், ராஜேந்திரன் கார்த்திகேயன், முருகன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தியதுடன், இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை