டிஎன்பிஎல் 2022: மழையால் தடைபட்ட இறுதிப்போட்டி; கோப்பை பகிர்ந்தளிப்பு!

Updated: Mon, Aug 01 2022 12:08 IST
Image Source: Google

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் முன்னேறின.

அதன்படி நேற்று இரவு கோயம்பத்தூரில் நடந்தது இந்த இறுதிப்போட்டியானது,இரவு 7.15 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய நிலையில், மழையால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக தொடங்கப்பட்டது. 

அதன் காரணமாக ஆட்டம் 17 ஓவர்களாகவும் குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக பேட்டிங் விளையாடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 65 ரன்களை குவித்தார். 

அவரைத்தவிர மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. சாய் சுதர்சனின் அதிரடி அரைசதத்தால் 17 ஓவரில் 138 ரன்கள் அடித்தது லைகா கோவை கிங்ஸ்.

அதன்பின் 17 ஓவரில் 139 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 4 ஓவரில் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அத்துடன் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. 

தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கோப்பை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை