வீரர்கள் பாதுகாப்பில் உறுதுணையாக இருந்த பாகிஸ்தானிற்கு நன்றி - டாம் லேதம்
பாகிஸ்தானில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுப்பயணம் செய்திருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதாக இருந்தது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை ரத்துசெய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இதையடுத்து நியூசிலாந்து அணி வீரர்கள் தனி விமானம் மூலம் துபாய் சென்றடைந்து, அங்கிருந்து இன்று ஆக்லாந்து சென்றடைந்தது. அதன்பின் வீரர்கள் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நியூசிலாந்து வீரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப உதவிய பாகிஸ்தான் நிர்வாகிகளுக்கு நன்றி என நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதுகுறித்து பேசிய லேதம், “பாகிஸ்தான் - நியூசிலாந்து தொடர் ரத்து செய்யப்பட்டவுடன், நாங்கள் 24 மணி நேரம் இஸ்லாமாபாத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தோம். அப்போது பாகிஸ்தான் அதிகாரிகள் வீரர்களின் பாதுகாப்பில் உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு நாங்கள் நன்றி கூற கடைமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.