ஐசிசி உலகக்கோப்பை 2023: அதிக ரன், விக்கெட்டுகள், சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்!
இந்தியாவில் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்றுள்ள லீக் போட்டிகளில் இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தானை தவிர அனைத்து அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடிவுள்ளன.
இந்நிலையில் இன்று இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் 6 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. 5 வெற்றிகளுடன் தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும், தலா 4 வெற்றிகளுடன் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
இந்நிலையில் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை அதிக ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்கா வீரர் டி காக்கும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பாவும் முதலிடத்தில் உள்ளார்.
அதிக ரன்கள்
- குயின்டன் டி காக், தென் ஆப்பிரிக்கா - 431
- டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா - 413
- ரச்சின் ரவீந்தரா, நியூசிலாந்து - 406
- ரோஹித் சர்மா, இந்தியா - 398
- ஐடன் மார்க்ரம், தென் ஆப்பிரிக்கா - 356
அதிக விக்கெட்டுகள்
- ஆடம் ஸாம்பா, ஆஸ்திரேலியா - 16
- ஜஸ்ரித் பும்ரா, இந்தியா - 14
- மிட்செல் சாண்ட்னர், இந்தியா - 14
- மேர்கோ ஜான்சென், தென் ஆப்பிரிக்கா - 13
- ஷஹீன் அஃப்ரிடி, பாகிஸ்தான் - 13
அதிக சதம்
- டி காக், தென் ஆப்பிரிக்கா - 3
- டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா - 3
- ரச்சின் ரவீந்தரா, நியூசிலாந்து - 2
அதிக சிக்ஸர்கள்
- ரோகித் சர்மா, இந்தியா - 20
- டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா - 19
- ஹென்ரிச் கிளாசென், தென் ஆப்பிரிக்கா - 16