ஐபிஎல் 2022: கோலி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது - டூ பிளெசிஸ்!

Updated: Wed, Apr 27 2022 13:02 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டுபிளசி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரியான் பிராக் 56* ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதன்பின் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அந்த அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி (9), டூபிளசிஸ் (23), மேக்ஸ்வெல் (0), தினேஷ் கார்த்திக் (6) மற்றும் ஹசரங்கா (18) ஆகியோர் பெரும் ஏமாற்றம் கொடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 19.3 ஓவரில் 115 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூர் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக குல்தீப் சென் மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்தநிலையில், இந்த போட்டியில் பெங்களூர் அணியின் தோல்வி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய பெங்களூர் அணியின் கேப்டனான டூ பிளெசிஸ், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலி குறித்தும் பேசியுள்ளார்.

விராட் கோலியின் மோசமான பார்ம் குறித்து பேசிய டூபிளெசிஸ், “கடந்த போட்டியில் அடைந்த தோல்வியை மறந்துவிட்டு இந்த போட்டியில் விளையாட வேண்டும் என்றே நாங்கள் முடிவு செய்திருந்தோம், விராட் கோலியிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். 

விராட் கோலி மட்டும் இல்லை சிறந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் இத்தகையை சூழ்நிலையை சந்தித்து தான் ஆக வேண்டும். விராட் கோலி போன்ற ஒரு ஜாம்பவானை வெறும் ஓரிரு போட்டிகளை வைத்து எடை போடக்கூடாது. விராட் கோலி விரைவில் தனது பழைய ஆட்டத்திற்கு திரும்புவார் என முழுமையாக நம்புகிறோம், விராட் கோலிக்கு எங்களது முழு ஆதரவும் உள்ளது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை