PAK vs AUS, 1st ODI: அதிரடியில் மிரட்டிய ட்ராவிஸ் ஹெட்; பாகிஸ்தானுக்கு 314 இலக்கு!

Updated: Tue, Mar 29 2022 19:29 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி லாகூரில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீச முடிவெடுத்தார்.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ட்ராவிஸ் ஹெட் - ஆரோன் ஃபிஞ்ச் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஃபிஞ்ச் ஒருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ட்ராவிஸ் ஹெட் அதிரடியில் மிரட்டினர்.

அதன்பின் 23 ரன்களில் ஆரோன் ஃபிஞ்ச் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பென் மெக்டர்மோட்டும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ட்ராவிஸ் ஹெட் சதம் விளாசி அசத்தினார். அவருக்கு துணையாக பென் மெக்டர்மோட்டும் அரைசதம் கடந்தார்.

அதன்பின் சதம் விளாசிய கையோடு ட்ராவிஸ் ஹெட் ஆட்டமிழக்க, 55 ரன்களில் பென் மெக்டர்மோட்டும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

இறுதியில் கேம்ரூன் க்ரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்களைச் சேர்த்தது.

பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராவூஃப் மற்றும் ஸாஹித் மஹ்மூத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை