ஜிம்பாப்வே வீரருக்கு மான்கட் வார்னிங் கொடுத்த தீபக் சஹார் - வைரல் காணொளி!

Updated: Mon, Aug 22 2022 19:38 IST
Image Source: Google

பந்துவீச்சு முனையில் நிற்கும் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் பந்துவீசும் முன்பே, ரன் ஓட வசதியாக க்ரீஸை விட்டு விலகி நின்று, பந்துவீச்சாளர் அவரை ரன் அவுட் செய்தால் அது மன்கட் ரன் அவுட் என்றழைக்கப்பட்டது. ஆட்டத்தின் ஸ்பிரிட்டுக்கு எதிரானது என்ற கருத்து பரவலாக இருப்பதால், மன்கட் ரன் அவுட் பெரும்பாலான பந்துவீச்சாளர்கள் செய்யமாட்டார்கள். 

ஆனால் 2019 ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டனான ரவிச்சந்திரன் அஸ்வின் மன்கட் ரன் அவுட் செய்தார். ஆனால் அஸ்வினின் செயல் தவறானது என்று பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அஷ்வினுக்கு சிலர் ஆதரவும் அளித்தனர். ஆனால் அஸ்வின் தான் செய்தது விதிகளுக்குட்பட்டதுதான் என்பதில் உறுதியாக இருந்தார்.

ஆனால் எம்சிசி-யே மன்கட் ரன் அவுட்டை முறையான ரன் அவுட் என அறிவித்துவிட்டது. இந்நிலையில், இன்று நடந்துவரும் இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டியில் தீபக் சாஹர் ஜிம்பாப்வே வீரர் கையாவிற்கு மன்கட் வார்னிங் விடுத்தார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ஷுப்மன் கில்லின் அதிரடி சதத்தால் (130) 50 ஓவரில் 289 ரன்களை குவித்தது. 290 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிவருகிறது ஜிம்பாப்வே அணி. ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் கையாவிற்கு முதல் ஓவரின் முதல் பந்திலேயே மன்கட் எச்சரிக்கை விடுத்தார் தீபக் சாஹர். 

 

முதல் ஓவரின் முதல் பந்தை வீச ஓடிவந்த தீபக் சாஹர், பந்துவீச்சு முனையில் நின்ற கையா க்ரீஸை விட்டு நகர்ந்ததை கண்டு பந்துவீசாமல் நின்று மன்கட் எச்சரிக்கை விடுத்தார். பின்னர் 3வது ஓவரில் அவரை 6  ரன்களுக்கு எல்பிடபிள்யூ செய்து அனுப்பினார். தீபக் சாஹர் மன்கட் வார்னிங் கொடுத்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை