அமெரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் ரத்து!

Updated: Tue, May 28 2024 22:45 IST
Image Source: Google

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடப்பு ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. தொடருக்கு முன்னதாக பங்கேற்கும் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று உலகக்கோப்பை அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் தொடங்கின. அதன்படி நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் கனடா, ஓமன் மற்றும் நமீபியா அணிகள் வெற்றிபெற்றன.

இந்நிலையில் இன்று நடைபெற இருந்த 5ஆவது பயிற்சி போட்டியில் வங்கதேசம் மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன. டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் நடைபெற இருந்த இப்போட்டியானது கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அமெரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, மைதானத்தில் உள்ள வசதிகள் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது.

கடுமையான புயல் மற்றும் சூறாவளியால் அந்த மைதானம் முழுவதும் பாதிக்கப்பட்டது, இதனால் மைதானம் விளையாட முடியாத நிலையில் இருந்தது. மேலும் மணிக்கு 80 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் அப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டது. மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த பிரமாண்ட திரை முற்றிலும் சேதமடைந்தது. போட்டியை நடத்துவதற்கு வானிலை சற்றும் பொருத்தமாக இல்லாததால், போட்டியை ரத்து செய்யதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை