கரோனா அச்சுறுத்தல்: அயர்லாந்து - அமெரிக்கா தொடர் ரத்து!
Updated: Wed, Dec 29 2021 14:42 IST
Image Source: Google
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அயர்லாந்து அணி 2 டி20 , 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தவடைந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற இருந்தது.
ஆனால் போட்டி நடுவர்களுக்கு கரோனா அறிகுறி தென்பட்ட நிலையில் முதல் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளும் மாற்று தேதிகளுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ரத்துசெய்யப்படுவதாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கூட்டாக அறிவித்துள்ளது.