டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவது அவசியம் - ரவீந்திர ஜடேஜா

Updated: Sat, Nov 06 2021 12:39 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

இதில் இந்திய அணி ஸ்காட்லாந்தை 85 ரன்களில் சுருட்டியதுடன், 6.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றியையும் பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

பின்னர் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஜடேஜா, “இந்த மைதானத்தில் நான் பந்து வீசிய விதம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் குறிப்பாக நான் எடுத்த முதல் விக்கெட் ஸ்பெஷலான ஒன்று. ஏனெனில் இதுபோன்ற மைதானங்களில் பந்து கொஞ்சம் டர்ன் ஆகி விக்கெட் விழுவது ஒரு பந்துவீச்சாளராக மகிழ்ச்சியை தரும். இது போன்ற நல்ல கிரிக்கெட்டை நாங்கள் விளையாட விரும்புகிறோம். இன்றைய போட்டியில் பெரிய வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி.

Also Read: T20 World Cup 2021

இன்னும் ஒரு போட்டி எங்களுக்கு உள்ளது. இதே போன்று நாங்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் எங்களை யாராலும் வீழ்த்த முடியாது. டி 20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவது அவசியம். அந்த வகையில் இதே போன்ற ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தினால் நிச்சயம் நாங்கள் வீழ்த்த முடியாத அணியாக திகழ்வோம்” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை