இரு வார இடைவெளியில் தாய், சகோதரியை இழந்த வேதா கிருஷ்ணமூர்த்தி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி. இவர் இந்திய அணிக்காக 48 ஒருநாள், 76 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக கடந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் விளையாடினார்.
இந்நிலையில் வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாய் தேவி (67) இரு வாரங்களுக்கு முன்பு கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் வேதாவின் சகோதரி வத்சலாவும் (42) கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த மாதம் வேதாவின் தந்தை, சகோதரர், சகோதரி எனப் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற வேதா கிருஷ்ணமூர்த்திக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரு வார இடைவெளியில் தாய், சகோதரியை இழந்த வேதா கிருஷ்ணமூர்த்திக்கு பலரும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலையும், ஆறுதல்களும் தெரிவித்து வருகிறார்கள்.