ஐபிஎல் 2021: பழிக்குப் பழி தீர்த்த அஸ்வின் !

Updated: Tue, Sep 28 2021 20:41 IST
VIDEO: Ashwin Dismisses Morgan, Gives Him A Send Off (Image Source: Google)

ஐபிஎல் 2021 தொடரில் இன்று நடைபெற்ற 41ஆவது லீக் ஆட்டத்தி டெல்லி கேபிட்டல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின. இப்போட்டியில் கேகேஆர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. 

இந்த போட்டியில், ஆட்டத்தின் கடைசி ஓவரை டிம் சௌதி வீசினார். பந்தை எதிர்கொண்ட அஸ்வின், டீப் ஸ்கொயர் லெக்கில் தூக்கி அடிக்க, நிதிஷ் ராணா கைகளில் பந்து தஞ்சமடைய 9 ரன்களில் அவுட்டானார் . ராணா கேட்ச் பிடித்த பிறகு, வெளியேற தயாரான அஸ்வினிடம் கேகேஆரின் டிம் சௌதி ஏதோ சில வார்த்தைகளை விட, அஸ்வினும் பதில் சொல்லிக் கொண்டே கடுப்பாக வெளியேறினார் . 

அப்போது திடீரென உள்ளே என்ட்ரி கொடுத்த கேப்டன் மோர்கனும் சில வார்த்தைகளை விட, வெளியே சென்றுக் கொண்டிருந்த அஸ்வின் மீண்டும் திரும்பி வந்து பதிலுக்கு பதில் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்தார். உடனடியாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தலையிட்டு, அஸ்வினை தட்டிக் கொடுத்து 'பரவாயில்ல.. விடு, விடு' என்று தமிழில் சொல்லி அனுப்பி வைத்தார். 

இந்த மோதலுக்கான காரணம் என்ன என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. ஆனால், 18.6 ஆவது ஓவரில், மிஸ் ஃபீல்டு காரணமாக, அஷ்வின் - பண்ட் இணை இரண்டாவது ரன்னை ஓடி எடுத்தது. இந்த ரன் காரணமாகத் தான் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இதையடுத்து கேகேஆர் பேட்டிங் செய்த போது கேப்டன் இயன் மோர்கன் ரன் ஏதும் எடுக்காமல் அஸ்வின் ஓவரில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த போட்டியிலேயே இந்த விக்கெட் தான் அனைவரையும் கவனிக்க வைத்தது. 

 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அஸ்வின் தான் பேட்டிங் செய்கையில் அவுட்டான போது வம்பிழுத்த மோர்கனை அவுட்டாக்கிவிட்டு அவர் முன்னே சென்று கத்தி தனது கோபத்தை தீர்த்துக் கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகவும் மாறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை