விஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது சவுராஷ்டிரா!

Updated: Wed, Dec 22 2021 17:42 IST
Image Source: Google

விஜய் ஹசாரே கோப்பை காலிறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா - விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  இதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய விதர்பா அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் வான்கெடே மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 72 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின் இலக்கை துரத்திய சவுராஷ்டிரா அணியும் ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. 

அனால் பொறுப்புடன் விளையடிய பெரக் மான்கட் 77 ரன்களைக் கு வித்து அணிக்கு வெற்றியை தேடுத்தந்தார். 

இதன்மூலம் 29.5 ஓவர்களிலேயே சவுராஷ்டிரா அணி இலக்கை எட்டி 7விக்கெட் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டுக்கு தகுதியடைந்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை