ரஹானே, புஜாரா மீண்டும் ஃபார்முக்கு திரும்புவர் - விக்ரம் ரத்தோர்

Updated: Sun, Nov 28 2021 21:44 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிக்களுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற 284 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

ஆனால் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரஹானே, துணைக்கேப்டன் புஜாரா ஆகிய இருவரும் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

மாறாக அறிமுக வீரர் ஸ்ரேயஸ் ஐயர் முதல் இன்னிங்ஸில் சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதனால் நியூசிலாந்துடனான இரண்டாவது போட்டியில் புஜாரா அல்லது ரஹானேவுக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், புஜாரா மற்றும் ரஹானே கூடிய விரைவில் ஃபார்முக்கு திரும்புவார்கள், அதனால் அவர்களை நீக்குவது குறித்து எந்த ஆலோசனையும் இல்லை என்று பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “முன்வரிசை வீரர்கள் சரியாக விளையாட வேண்டியது அவசியம். ஆனால் நீங்கள் அணியின் அனுபவம் வாய்ந்த வீரர்களைப் பற்றி பேசுகிறீர்கள். அவர்கள் இந்திய அணிக்காக 80, 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் மிக்க வீரர்கள். 

அவர்கள் சமீப காலமாக சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவர்கள் இருவரும் அணிக்கு பல அற்புதமாக வெற்றிகளைத் தேடிக்கொடுத்துள்ளனர். அதனால் அவர்கள் கூடிய விரைவிலேயே தங்கள் ஃபார்முக்கு திரும்புவர். இனி வரும் காலங்களில் அவர்கள் தங்கள் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்துவர்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை