சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய விராட் கோலி!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் விளையாடி வருகிறது.
அடிலெய்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.
இதில் அதிக பட்சமாக பாண்ட்யா 63 ரன்களும், விராட் கோலி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்த தொடரில் 4 அரை சதம் அடித்த விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உள்ளார். அதனை தொடர்ந்து மார்ட்டின் கப்தில் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் உள்ளனர்.