ஐபிஎல் 2023: பஞ்சாபிற்கு எதிரான ஆட்டத்தில் சாதனைகளை குவித்த விராட் கோலி!

Updated: Thu, Apr 20 2023 18:15 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 27ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார். இப்போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி மகத்தான சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

விராட் கோலி ஆர்சிபி அணியின் ரன் மிஷினாக விளங்கி வருகிறார். ஆர்சிபி அணியின் பேட்டிங்கை தொடர்ந்து தமது தோளில் சுமந்த வரும் விராட் கோலி, சாம்பியன் பட்டம் என்ற பரிசு மட்டும் கிடைத்தது அல்ல. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் நன்றாக விளையாடினார் என்பதை அவர் அடித்த அரைசதம், சதத்தை வைத்து தான் சொல்வார்கள்.

ஆனால், அதுவே டி20 கிரிக்கெட் போட்டியாக இருந்தால் அரைசதம், சதத்தையும் சேர்த்து பேட்ஸ்மேன் எத்தனை முறை 30 ரன்களை அடித்து இருக்கிறார்கள் என்பதை பார்ப்பார்கள். அந்த வகையில் இன்றைய பஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 30 ரன்களை கடந்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 100 முறை 30 ரன்களை கடந்த வீரர் என்ற சதானையைப் படைத்துள்ளார். 

இந்த பட்டியலின் 2ஆவது இடத்தில் இருக்கும் ஷிகர் தவான் 91 முறையும், டேவிட் வார்னர் 90 முறையும், ரோஹித் சர்மா 85 முறையும், சுரேஷ் ரெய்னா 77 முறையும் 30 ரன்களை கடந்து முதல் 5 இடத்தில் இருக்கிறார்கள். 

அதுமட்டுமின்றி விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் 40 பந்துகளில் எதிர்கொண்டு அரைசதம் கடந்தார். இதன் மூலம் கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் 6500 ரன்களை கடந்த முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் தோனி 6176 ரன்களுடன் 2ஆவது இடத்திலும், ரோஹித் சர்மா 5489 ரன்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர். 

 

அதேபோல் இப்போட்டியில் 5 பவுண்டரிகளை விளாசிய விராட் கோலி, ஐபிஎல் வரலாற்றில் 600 பவுண்டரிகளை அடித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். இப்போட்டியிலில் ஷிகர் தவான் 730 பவுண்டரிகளை விளாசி முதலிடத்திலும், டேவிட் வார்னர் 592 பவுண்டரிகளை விளாசி 3ஆம் இடத்திலும் உள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை