கேஎல் ராகுலின் வளர்ச்சி குறித்து வியந்த விராட் கோலி!

Updated: Sun, Feb 27 2022 11:12 IST
Image Source: Google

இந்திய அணியில் நட்சத்திர வீரர் கே.எல் ராகுல் சமீப காலங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்டு வரும் அவர் தற்போது இந்திய அணியில் சட்டென நீக்கமுடியாத அளவுக்கு ஒரு முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார்.கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் பட்டைய கிளப்பும் பேட்டிங்க்கை வெளிப்படுத்தி வரும் அவர் தொடர்ந்து 500 ரன்களை குவித்து வருகிறார். 

குறிப்பாக கடந்த சில வருடங்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் பேட்டிங்கில் மலைபோல ரன்கள் குவித்த போதிலும் இதர வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட தவறிய காரணத்தால் அந்த அணியால் பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியவில்லை.

அந்த சமயத்தில் கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் புதிய முழுநேர டி20 கேப்டனாக ரோஈத் சர்மா பொறுப்பேற்றதை அடுத்து துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமனம் செய்யப்பட்டார். அதன்பின் கடந்த டிசம்பர் மாதம் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்ட விராட் கோலிக்கு பதில் புதிய ஒருநாள் கேப்டன் ரோஈத் சர்மா நியமிக்கப்பட்டபோது ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும் அவர் நியமனம் செய்யப்பட்டார்.

அந்த வேளையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி காயம் அடைந்த நேரத்தில் டெஸ்ட் துணை கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவும் இல்லாத காரணத்தால் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன்ஷிப் செய்யும் பொன்னான வாய்ப்பு மீண்டும் ராகுலுக்கு தேடி வந்தது.

அதன்பின் கடந்த ஜனவரி மாதம் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் விலகியதை அடுத்து தற்காலிக கேப்டனாக கேஎல் ராகுல் செயல்ப்பட்டார். அத்துடன் தற்போது இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் பொறுப்பேற்றுள்ள ரோஹித் சர்மா தலைமையில் வருங்கால முழுநேர இந்திய கேப்டனாக கே எல் ராகுல் வளர்க்கப்படுவார் என இந்திய தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா வெளிப்படையாகவே அறிவித்து உள்ளார். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் கடந்த ஒரு வருடத்துக்குள் இந்திய கிரிக்கெட்டில் கேஎல் ராகுலின் வளர்ச்சி இமயத்தை தொட்டு புதிய உச்சத்தை அடைந்துள்ளது என்றே கூறலாம்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கூறுஅகியில்“2013ஆம் ஆண்டு பெங்களூரு அணியில் மயங்க் அகர்வால், கருண் நாயர் ஆகியோருடன் கே எல் ராகுல் இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் அவர் ஒரு டீ20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் என எனக்கு தோன்றவில்லை. அதன்பின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கிடைத்த வாய்ப்புகளிலும் அவர் ஐபிஎல் தொடரை தன்னை நிரூபித்தாக வேண்டும் என்ற அழுத்தத்துடன் விளையாடுகிறார் என எனக்கு தோன்றியது. அபார திறமை கொண்ட இவருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது பெங்களூர் அணிக்காக விளையாடினால் அவர் மீதான பாரம் குறைந்து விடும் என நான் கருதினேன். ஏனெனில் தனது சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் ஏபி டிவிலியர்ஸ், கிறிஸ் கெய்ல் மற்றும் என்னுடன் இணைந்து விளையாடினால் அவரின் தன்னம்பிக்கை உயரும் என நான் நினைத்தேன்.

அந்த சீசனில் அபாரமாக பேட்டிங் செய்யத் துவங்கிய அவர் அதன்பின் ஒரு தரமான வீரராக மாறத்துவங்கினார். அதன்பின் வெறும் 6 மாதங்களில் மிருக வளர்ச்சியை எட்டிய அவர் தற்போது அந்த பார்மை அப்படியே இன்னும் கடைபிடித்து வருகிறார்” என விராட் கோலி பாராட்டியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை