இது அவர் உலகின் சிறந்த வீரர் என்பதை காட்டுகிறது - சூர்யாவை பாராட்டிய விராட் கோலி!

Updated: Sun, Nov 20 2022 18:30 IST
Virat Kohli's stunning tweet after Suryakumar's hundred vs NZ breaks the internet (Image Source: Google)

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்த. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க வீரர்களாக ரிஷாப் பந்த் ,இஷான் கிஷான் களமிறங்கினர். தொடக்கம் முதல் இஷான் கிஷான் அதிரடியாகி விளையாடினார்.மறுபுறம் பந்த் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் இஷான் கிஷான் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 13 ரன்களில் வெளியேறினார் .

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ,ஹார்திக் பாண்டியா இருவரும் அதிரடியாக விளையாடினர்.குறிப்பாக சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்ட சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் மழை பொழிந்தார்.

இதனால் சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் சதம் அடித்தார்.இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 191ரன்கள் எடுத்தது சூர்யகுமார் யாதவ் 111ரன்களுடன் களத்தில் இருந்தார்.

அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் நீண்ட நேரம் தாக்குபிடித்து 52 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தாலும், மற்ற வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 18.5 ஓவரில் 126 ரன்கள் மட்டும் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

 

இந்த நிலையில் இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, இந்த இன்னிங்ஸ் குறித்து சூர்யகுமார் யாதவை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “இது அவர் உலகின் சிறந்த வீரர் என்பதை காட்டுகிறது. இதை நேரலையில் பார்க்கவில்லை, ஆனால் இது அவருடைய மற்றொரு வீடியோ கேம் இன்னிங்ஸ் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை