ஐபிஎல் 2025: சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி எது? - வீரேந்திர சேவாக் கணிப்பு!

Updated: Fri, Mar 21 2025 14:27 IST
Image Source: Google

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளை (மார்ச் 22) முதல் தொடங்க உள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. 

இந்நிலையில் எப்போதும் போல, இந்த சீசனுக்கு முன்பே கணிப்புகளின் சுற்று தொடங்கிவிட்டது. முன்னாள் வீரர்கள் பலரும் நடப்பு ஐபிஎல் தொடருக்கான கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் தனது கணிப்பைச் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியை கணித்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், நாடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸைத் தேர்வுசெய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடிக்கும் வீரராக கேஎல் ராகுலும், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக வருண் சக்ரவர்த்தியும் இருப்பார்கள் என்றும் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். இதுதவிர்த்து நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளையும் அவர் கணித்துள்ளார். 

அதன்படி எதிர்வரும் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் முன்னேறும் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தற்போதைய சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு அவர் முதல் 4 இடங்களில் இடம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

இதுபோன்ற சூழ்நிலையில், வீரேந்தர் சேவாக்கின் இந்த கணிப்புகள் அனைத்தும் எவ்வளவு துல்லியமானவை என்பதைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இத்தொடரை பற்றிப் பேசினால், நாளை நடைபெறவுள்ள முதல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகலுக்கும் இடையேயான இந்த போட்டி கேகேஆரின் சொந்த மைதானமான ஈடன் கார்டனில் ந்டைபெறவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை