என்னைய பேட்டிங் ஆடுர நீ? - ரஹானே பேட்டிங் குறித்து விவிஎஸ் லக்ஷ்மண்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய இந்திய அணி சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அதிரடியான அரைசதத்தினால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைச் சேர்த்தது.
ஆனால் இப்போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே 35 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் இந்திய அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி வழுத்துள்ளது.
இந்நிலையில் ரஹானேவின் பேட்டிங் குறித்து பேசிய விவிஎஸ் லக்ஷ்மண், “அஜிங்கியா ரஹானே கிரீஸுக்கு வந்தவுடன், கைல் ஜேமிசன் என்ன செய்தார்? அவர் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினார். ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக ரஹானேவுக்கு ஒரே ஒரு விருப்பம் உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும், அது புல் ஷாட் ஆடுவதுதான்.
ஆனால் அந்த ஷாட் தான் அவரை ஆட்டமிழக்க வழிவகுத்தது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் அதிக மைதானம் பெரிதாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பவுன்ஸ் இருப்பதால், ஸ்கொயர் விக்கெட்டில் விளையாடலாம்” என்று தெரிவித்துள்ளார்.