இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது. அவர் உடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ நீட்டிக்கவில்லை.

Advertisement

இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்குப் பலரது பெயர்கள் அடிப்பட்டு வந்த நிலையில், கடைசியாக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து அவர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

Advertisement

பிசிசிஐ விதிகளின்படி ஒரே நபர் இரண்டு பதவிகளில் இருக்கக் கூடாது என்பதால், ராகுல் டிராவிட் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பதவிக்கு புதிய நபரை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய இயக்குநராக விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்படலாம் எனக் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே செய்திகள் வெளியானது. 

முதலில் விவிஎஸ் லட்சுமண் மறுத்தாலும் பின்னர், பிசிசிஐ தலைவராக உள்ள கங்குலியே தனிப்பட்ட முறையில் லட்சுமணிடம் பேசியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பொறுப்பை விவிஎஸ் லட்சுமண் ஏற்கவுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் கங்குலி உறுதி செய்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நிர்வாக பொறுப்பில் இருப்பது எப்போதும் கிரிக்கெட் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்பதே கங்குலியின் நிலைப்பாடு. அவர் எடுத்த தீவிர முயற்சிக்குப் பின்னரே ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கச் சம்மதித்தார்.

Also Read: T20 World Cup 2021

Advertisement

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பயிற்சியாளரோடு என்சிஏ தலைமையும் இணைந்து செயல்பட்டுவருகிறது. இந்த சூழலில் மீண்டும் டிராவிட் - லட்சுமண் கைகோர்க்கும் பட்சத்தில் அது இந்தியாவுக்கு அதிக நன்மைகளைத் தரும் என்பதால் பிசிசிஐ தலைவர் கங்குலி மட்டுமின்றி செயலாளர் ஜெய் ஷா உட்பட முக்கிய நிர்வாகிகளும் அதையே தான் விரும்புகின்றனர். விவிஎஸ் லட்சுமணன் தனது குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்புவதாலேயே முதலில் இந்தப் பதவியை ஏற்கத் தயக்கம் காட்டினார்” என்று பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News