மகளிர் ஆசிய கோப்பை 2022: தாய்லாந்தை 37 ரன்களில் சுருட்டியது இந்தியா!

Updated: Mon, Oct 10 2022 14:10 IST
Image Source: Google

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ஹர்மன்ப்ரித் கவுர் தலைமையிலான இந்திய அணி தகுதிப்பெற்றுள்ளது.

இந்நிலையில் தாய்லாந்து மகளிர் அணியுடன் இந்திய மகளிர் அணி இன்று லீக் ஆட்டத்தை விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. மேலும் இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலம் ஸ்மிருதி மந்தனா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100ஆவது போட்டியில் பங்கேற்றுள்ளார்.

இதற்முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரித் கவுர் 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியிருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ஸ்மிருதி மந்தனா அந்த பட்டியளில் இடம்பிடித்துள்ளனர். 

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய தாய்லாந்து மகளிர் அணி வீராங்கனைகள் இந்திய அணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

அதிலும் அந்த அணியில் நன்னபட் கொஞ்சரோங்கையைத் தவிர மற்ற யாரும் இரட்டை இலக்க ரன்களைத் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 15.1 ஓவர்களில் தாய்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 37 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இந்திய அணி தரப்பில் ஸ்நே ராணா 3 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா, ராஜெஸ்வரி கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை