Deepti sharma
WPL 2023: பெர்ரி அதிரடி சதம்; பந்துவீச்சில் கலக்கிய எக்லெஸ்டோன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி, யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா இப்போட்டியில் வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த சோபி டிவைன் - எல்லிஸ் பெர்ரி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.