ஐபிஎல் 2022: நாட்டிற்காக மீண்டும் விளையாட வேண்டும் - தினேஷ் கார்த்திக்

Updated: Sun, Apr 17 2022 12:29 IST
Image Source: Google

15ஆவது ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

நாட்டுக்காக எதாவது செய்யனும்... நான் இவ்வளவு கஷ்டப்படுறதே இதுக்காக தான்; ஓபனாக பேசிய தினேஷ் கார்த்திக் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 66* ரன்களும், கிளன் மேக்ஸ்வெல் 55 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் 66 ரன்களும், கேப்டன் ரிஷப் பண்ட் 34 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்றவர்கள் பெரிதாக ரன் குவிக்க தவறியதாலும், ரிஷப் பண்ட் இக்கட்டான நேரத்தில் விக்கெட்டை இழந்ததாலும், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.

இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பெங்களூர் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த தினேஷ் கார்த்திக், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்டநாயகன் விருது வென்றபிறகு பேசிய தினேஷ் கார்த்திக், இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க மிக கடினமாக முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசுகையில், “எனக்கு ஒரு பெரிய குறிக்கோள் உள்ளது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். நான் மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன். நாட்டிற்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். இது எனது பயணத்தின் ஒரு பகுதி. நான் இந்திய அணியில் மீண்டும் இடம் பெற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை