வாசீம் முகமது சதத்தால் அயர்லாந்தை வீழ்த்தியது அமீரகம்!
சம்மர் டி20 பேஷ் தொடரின் 6ஆவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து - ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற அமீரக அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - கெவின் ஓ பிரையன் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் கெவின் ஓ பிரையன் அரைசதம் அடித்தார்.
அதன்பின் ஸ்டிர்லிங் 40 ரன்களில் ஆட்டமிழக்க, கெவின் ஓ பிரையனும் 54 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த வீரர்களும் சரிவர விளையாடததால் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரக அணிக்கு தொடக்கம் தந்த வாசீம் முகமது ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தினார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதன்மூலம் அந்த அணி 16.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வாசீம் முகமது 107 ரன்களைச் சேர்த்திருந்தார்.