பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பே எனக்கு வேணாம் - வாசிம் அக்ரம்!

Updated: Thu, Oct 07 2021 12:53 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான வாசிம் அக்ரம், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். 2003  உலக கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற வாசிம் அக்ரம், பயிற்சியாளருக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தும் அவர் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக விரும்பவில்லை.

ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய வாசிம் அக்ரம், பிற்காலத்தில் அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆலோசகராகவும் இருந்துள்ளார். ஆனாலும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஆக அக்ரம் விரும்பவில்லை.

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் பொறுப்பிலிருந்து மிஸ்பா உல் ஹக்கும் வக்கார் யூனிஸும் விலகினர். இதையடுத்து புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணி படுமோசமான நிலையில் உள்ளது. கீழே கிடக்கும் பாகிஸ்தான் அணியை வலுவான அணியாக உருவாக்க வேண்டிய கட்டாயமிருக்கும் நிலையில், அதற்கு தகுதியான வாசிம் அக்ரம், அதைப்பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து பேசியுள்ள வாசிம் அக்ரம், “தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்தால் வருடத்தில் 200-250 நாட்கள் வீட்டை விட்டு வெளியே இருக்கவேண்டும். அது எனக்கு சரிப்பட்டுவராது. பி.எஸ்.எல்(பாகிஸ்தான் சூப்பர் லீக்) தொடரின்போது நான் இளம் வீரர்களுடன் தான் முழு நேரம் செலவிடுகிறேன். அவர்கள் அனைவருமே எப்போது என்ன சந்தேகம் என்றாலும், எனக்கு நேரடியாக ஃபோன் செய்து அறிவுரைகளை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

நான் முட்டாள் கிடையாது. பயிற்சியாளர்கள், சீனியர் வீரர்களை சமூக வலைதளங்களில் எப்படி ஒழுங்கீனமாக விமர்சிக்கிறார்கள்/நடத்துகிறார்கள் என பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். பயிற்சியாளர்கள் திட்டங்கள் வகுத்து, ஆலோசனைகளைத்தான் வழங்கமுடியும். களத்தில் அவற்றையெல்லாம் சிறப்பாக செயல்படுத்தி நன்றாக ஆடவேண்டியது வீரர்களின் கடமை. அணி தோற்றுவிட்டால் அதற்கு பயிற்சியாளர் எந்தவிதத்திலும் பொறுப்பேற்க முடியாது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

என் மீது அந்தமாதிரி தரக்குறைவாகவோ விமர்சித்தாலோ எனக்கு செட் ஆகாது. அதுதான் என் பயம். கிரிக்கெட் மீதான அதீத ஆர்வமுள்ளவர்களை எனக்கு பிடிக்கும். ஆனால் அதேவேளையில், ஒழுங்கீனமானவர்களை எனக்கு பிடிக்காது. சமூக வலைதளங்களில் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை