ஒடிசா அணியின் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமனம்!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை விளாசியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரம் வாசிம் ஜாஃபர். கடந்த 2020ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்த இவர், அதன்பின் வங்கதேசம், கிங்ஸ் லெவன் பஞ்சாப், உத்ராகாண்ட் அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதையடுத்து ஒடிசா கிரிக்கெட் சங்கம் வாசிம் ஜாஃபரை தங்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அந்த அணியின் சிஇஓ சுபர்தா பெஹெரா,“ஒடிசா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் இப்பதவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் வரவுள்ள உள்ளூர் சீசனிலிருந்து அவரது பதவிக்காலம் தொடங்கும்” என்று தெரிவித்தார்.
இதுவரை 260 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள வாசிம் ஜாஃபர் 19ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.