ஐபிஎல் 2022: 40 வயதிலும் கீப்பிங்கில் அசத்தும் தோனி!
ஐபிஎல் 15ஆவது சீசனின் 11ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்இ பஞ்சாப் அணியும் மோதி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகேப்டன் ஜடேஜா பந்துவீசுவதாக அறிவித்தார். முதல் ஓவரை இந்திய வீரர் முகேஷ் சௌத்ரி வீசினார். முதல் பந்தே பவுண்டரி செல்ல, ஆஹ இன்று பெரிய ஸ்கோர் உறுதி என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் முகேஷ் சௌத்ரி முதல் ஓவரிலேயே மாயங் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் நடப்பு சீசனில் சிஎஸ்கே பவர்பிளேவில் தங்கள் முதல் விக்கெட்டை வீழ்த்தியது.
இதனையடுத்து , 2ஆவது ஓவரை இங்கிலாந்து வீரர் ஜோர்டன் வீசினார் முதல் பந்தே சிக்சருக்கு சென்றது இதன் அடுத்த பந்தே தோனி ஒரு சம்பவத்தை செய்தார். ராஜபக்சே அடித்த பந்து, ஜோர்டனே ஓடி வந்து பிடித்தார். அதற்குள் ரன் ஓடிவிடலாம் என நினைத்த ராஜபக்சா, மீண்டும் பாதியில் நின்று மிண்டும் நின்ற முனைக்கே திரும்பினார்.
இதனை பார்த்த ஜார்டன் பந்தை தூக்கி தோனியிடம் வீசினார். அதற்குள் தோனி ஸ்டம்பை நோக்கி ஓடி பந்தை பிடித்து பாய்ந்து ரன் அவுட் செய்தார். இதனையடுத்து சிஎஸ்கே வீரர்கள் தோனியை வந்து வாழ்த்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜபக்சா, நடுவரின் முடிவுக்காக காத்திருக்காமல் அவரே பெவிலியன் நோக்கி சென்றுவிட்டார்.
இதனால் 14 ரன்களுக்கு பஞ்சாப் அணி 2 விக்கெட்டை இழந்தது. 40 வயதிலும் தோனி கில்லி மாதிரி விக்கெட் கீப்பிங் செய்வது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து பஞ்சாப் அணியின் லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி தரும் வகையில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.