அர்ஷ்தீப் சிங் ஓவரில் அதிரடி காட்டிய அப்துல் சமத்; காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மிட்செல் மர்ஷ் ரன்கள் ஏதுமின்றியும், ஐடன் மார்க்ரம் 22 ரன்னிலும், ரிஷப் பந்த் 2 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த நிக்கோலஸ் பூரன் - ஆயூஷ் பதோனி இணை சிறப்பா ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
பின் 44 ரன்களில் நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை இழக்க, ஆயூஷ் பதோனி 41 ரன்களுக்கும், இறுதியில் அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் 19 மற்றும் அப்துல் சமத் 27 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் லக்னோ அணி வீரர் அப்துல் சமத் அதிரடியாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்படி இன்னிங்ஸின் 18ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசிய நிலையில், அந்த ஓவரை எதிர்கொண்ட அப்துல் சமத் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்நிலையில் சமத் அதிரடியாக விளையாடும் காணொளி வைரலாகி வருகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த்(கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், திக்வேஷ் சிங் ரதி, ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், ரவி பிஷ்னோய்.
இம்பேக்ட் வீரர்கள் - பிரின்ஸ் யாதவ், மணிமாறன் சித்தார்த், ஷாபாஸ் அகமது, ஹிம்மத் சிங், ஆகாஷ் மகாராஜ் சிங்.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், சூர்யன்ஷ் ஷெட்ஜ், மார்கோ ஜான்சன், லோக்கி ஃபெர்குசன், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
Also Read: Funding To Save Test Cricket
இம்பேக்ட் வீரர்கள் - பிரவீன் துபே, விஜய்குமார் வைஷாக், நேஹால் வதேரா, விஷ்ணு வினோத், ஹர்பிரீத் ப்ரார்