அபார கேட்ச்சின் மூலம் ரவீந்திராவை வெளியேற்றிய அக்ஸர் படேல் - வைரலாகும் காணொளி!

Updated: Sun, Mar 02 2025 20:46 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி துபாயில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களைச் சேர்த்தது. 

இந்திய அணி தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்ததுடன் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 79 ரன்களையும், இறுதியில் அதிரடியாக விளையடைய ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களையும், அக்ஸர் படேல் 42 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவீந்திரா - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட ரச்சின் ரவீந்திரா 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 22 ரன்களில் வில் யங்கும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய டேரில் மிட்செலும் 17 ரன்களுடன் நடையைக் கட்டினார். 

இருப்பினும் அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீரர் அக்ஸர் படேல் பவுண்டரில் எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அதன்படி இன்னிங்ஸின் 4ஆவது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசிய நிலையில், அந்த ஓவரின் கடைசி பந்தை பவுன்சராக வீசினார். அதனை எதிர்கொண்ட ரச்சின் ரவீந்திரா தேர்ட் மேன் திசையில் பவுண்டரி அடிக்கும் முயற்சியில் அப்பர் கட் ஷாட்டை விளையாடினார். 

ஆனால் பந்து அவரின் பேட்டில் பட்டு உயரச் சென்றதை அடுத்து, அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த அக்ஸர் படேல் ஓடிவந்த அபாரமான கேட்ச்சை பிடித்து அசத்தினார். அக்ஸர் படேலின் இந்த கேட்ச்சை கண்ட ரசிகர்கள் ஒருகணம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் தான் அக்ஸர் படேல் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இந்தியா பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா(கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்து பிளேயிங் லெவன்: வில் யங், ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை