ஐபிஎல் 2022: ஏபிடியை கண்முன் நிறுத்திய ப்ரீவிஸ்!

Updated: Wed, Apr 06 2022 22:06 IST
WATCH: 'Baby AB' Dewald Brevis Smacks A 'No-Look' Six On Debut For Mumbai Indians (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 14ஆவது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. புனே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு ஓப்பனிங்கே அதிர்ச்சி தந்தார் உமேஷ் யாதவ். அவர் வீசிய 3ஆவது ஓவரிலேயே ரோகித் சர்மா 3 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பின்னர் தான் பெரும் ட்விஸ்ட் இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் தென்னாப்பிரிக்க வீரர் டேவால்ட் பிரேவிஸ் முதல் விக்கெட்டிற்கு களமிறங்கினார்.

தென் ஆப்பிரிக்காவின் அண்டர் 19 வீரரான டேவால்ட் பிரேவிஸ், இன்னும் சர்வதேச போட்டியில் கூட அறிமுகமாகவில்லை. ஆனால் முதல் விக்கெட்டிற்கு வந்துவிட்டார் என எதிரணி சாதாரணமாக நினைத்துவிட்டனர். இதனால் அவருக்கு எதிராக புதுமுக வீரர் ராஷிக் சாலமை அனுப்பி பவுலிங் வீசினார் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் ஒரே ஒரு ஷாட் மூலம் அத்தனை பேரையும் திக்குமுக்காட வைத்துவிட்டார்.

4ஆவது ஓவரில் ராஷிக் வீசிய முதல் பந்தே திடீரென பவுண்டரி எல்லையில் கிடந்தது. இன்ஸ்விங்கராக போடப்பட்ட அந்த பந்தை சரியான டைமிங்குடன் டிவில்லியர்ஸை போன்றே கிடாசினார் பிரேவிஸ். இதனை பார்த்த ரசிகர்கள், ஏபி டிவில்லியர்ஸ் தான் மீண்டும் வந்துவிட்டார் என்பது போன்று வியப்படைந்தனர்.

இதன்பின்னர் நம்பிக்கை பெற்ற அவர், தொடர்ந்து 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என கிடைக்கும் ஒவ்வொரு பந்தையும் எல்லைக்கோட்டின் பக்கம் திருப்பினார். இதனால் பதற்றமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் வருண் சக்கரவர்த்தியின் உதவியுடன் பிரேவிஸின் விக்கெட்டை கைப்பற்றினார்.

 

இப்போட்டியில் 19 பந்துகளை சந்தித்த பிரேவிஸ் 2 சிக்ஸர்கள் , 2 பவுண்டரிகள் என 29 ரன்களை குவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை