ஐபிஎல் 2022: சூப்பர் மேனாக மாறிய மேக்ஸ்வெல்; ரசிகர்கள் வாழ்த்து!

Updated: Sun, Apr 10 2022 11:05 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது.

அதன்பின் விளையாடிய ஆர்சிபி அணியில் 18.3 ஓவரில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ஆர்சிபி அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் இன்று தனது முதல் போட்டியில் விளையாடினார். திருமணத்திற்கு பின் அவர் ஃபார்மில் தான் இருக்கிறாரா, பேட்டிங் சிறப்பாக இருக்குமா என ரசிகர்கள் குழம்பியிருந்தனர். ஆனால் ஃபீல்டிங்கில் தனது எண்ட்ரி இன்னும் மாஸாக இருக்கிறது என நிரூபித்துள்ளார்.

ஆட்டத்தின் 10ஆவது ஓவரில் ஆகாஷ் தீப் வீசிய பந்தை திலக் வர்மா அருகில் அடித்துவிட்டு சிங்கிள் எடுக்க ஓடினார். ஃபீல்டர்கள் தூரத்தில் இருந்ததால் ரன் ஓடிவிடலாம் என நினைத்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தூரத்தில் இருந்த மேக்ஸ்வெல் மிகவும் வேகமாக ஓடி வந்து டைவ் அடித்து பந்தை ஸ்டம்பை நோக்கி வீசினார்.

மேக்ஸ்வெல் சூப்பர் மேனை போன்று காற்றில் பறந்துக்கொண்டிருந்த போது வீசிய அந்த பந்து துள்ளியமாக ஸ்டம்ப்பில் பட்டு விக்கெட் எடுத்தது. இதனால் திலக் வர்மா ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுணையாகவே இருந்தது. இவருக்கு பின்பு வந்த கெயீரன் பொல்லார்டும் டக் அவுட், ராமந்தீப் சிங் 8 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர்.

திலக் வர்மாவின் விக்கெட்டால் 50 - 1 என இருந்த மும்பை அணியின் ஸ்கோர் 79 - 6 என பரிதாபமான நிலைக்கு சென்றது. அதன்பின்னர் சூர்யகுமார் யாதவ் மட்டும் தனியாளாக 68 ரன்களை விளாசி மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை