சதத்தை தவறவிட்ட ருதுராஜ் கெய்க்டாவ்; வேதனையில் ரசிகர்கள்!

Updated: Sun, May 01 2022 22:45 IST
Image Source: Google

15ஆவது ஐபிஎல் தொடரின் 46ஆவது லீக் போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன.

புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டெவன் கான்வே மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் முதல் ஓவரில் இருந்தே ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்தனர்.

ஹைதராபாத் பந்துவீச்சாளர்களின் அனைத்து வியூகங்களையும் தவிடுபொடியாக்கிய இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்து வரலாறு படைத்த நிலையில், ருத்துராஜ் கெய்க்வாட் 99 ரன்களில் விக்கெட்டை இழந்து வெறும் 1 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ருத்துராஜ் கெய்க்வாட் விக்கெட்டை இழந்தபிறகும் பொறுப்பாக விளையாடி இறுதி வரை தாக்குபிடித்த டெவன் கான்வே 55 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்துள்ள சென்னை அணி 202 ரன்கள் குவித்துள்ளது.

 

இந்தநிலையில், இந்த போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்துராஜ் கெய்க்வாட் வெறும் 1 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் ருத்துராஜ் கெய்க்வாட்டை ஒட்டுமொத்த ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டி வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::