ஐசிசியின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்றார் டேரில் மிட்செல்!

Updated: Wed, Feb 02 2022 20:14 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பை கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன நியூசிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்தது.

டேரில் மிட்சல், நீஷம் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, நீஷம் தரையோடு அடித்த பந்தை பந்து வீச்சாளர் ஆதிக் ரஷித் தடுக்கக்கூடிய தூரத்தில் நேரான திசையில் வந்தது. அப்போது எதிர்முனையில் இருந்த டேரில் மிட்செல் ரன் அவுட்டாகாமல் இருந்து கிரீஸ்க்குள் பேட்டை வைக்க முயற்சி செய்தார்.

அப்போது ரஷித் மீது பயங்கரமாக மோதிக்கொண்டார். ஆனால் மிட்செல் மீது தவறு இல்லாத நிலையில், ரஷித் தடுமாறியதால் மிட்செல் ரன் ஓட மறுத்துவிட்டார். அப்போது, மிட்செல் நேர்மையை பார்த்து கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டினர்.

Click here to watch video

இந்த நிலையில், டேரில் மிட்செலுக்கு ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. நியூசிலாந்தை சேர்ந்த வெட்டோரி, மெக்கல்லம், கேன் வில்லியம்சன் ஆகியோர் இதற்கு முன் ஸ்பிரிட் ஆஃப் கிரக்கெட் விருதை வென்றுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை