தோனியை கண்முன் நிறுத்திய தினேஷ் பானா - ரசிகர்கள் சிலிர்ப்பு!

Updated: Sun, Feb 06 2022 11:22 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் இளம் படை 5ஆவது முறையாக கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை, ராஜ் பவா மற்றும் ரவிக்குமார் ஆகியோர் மிரட்டினர். அவர்களின் அட்டகாச பவுலிங்கால் இங்கிலாந்து அணி டாப் ஆர்டர் சரிந்தது. 91 ரன்களுக்குள் 7 விக்கெட்களை இழந்து விழிப்பிதுங்கி நின்ற நேரத்தில் ஜேம்ஸ் ரேவ் மட்டும் 95 ரன்கள் அடிக்க 189 ரன்களுக்கெல்லாம் இங்கிலாந்து சுருண்டது. இந்திய அணி தரப்பில் ராஜ் பவா 5 விக்கெட்டையும், ரவிகுமார் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்தை மிரட்டினர்.

இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆட்டத்தின் 2ஆவது பந்திலேயே விக்கெட் விழுந்தது. இதன் பின்னர் வந்த துணைக்கேப்டன் ஷாயிக் ரஷீத் 50 ரன்கள், கேப்டன் யாஷ் துல் 17 ரன்கள் அடிக்க இந்திய அணி சீரான இடைவெளியில் ரன்களை சேர்த்தது. எனினும் கடைசி நேரத்தில் முக்கிய விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்ததால் அனைவருக்கும் பதற்றம் எடுத்தது.

176 ரன்களுக்கு 6 விக்கெட்கள் என்ற சமயத்தில் உள்ளே வந்த விக்கெட் கீப்பர் தினேஷ் பானா நிஷாந்துடன் சேர்ந்து கடைசி நேரத்தில் சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தார். ஆட்டத்தின் கடைசி 18 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது. கையில் 4 விக்கெட்கள் தான் உள்ளது. அப்போது தான் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தினேஷ் பானா. 48ஆவது ஓவரின் 3வது பந்தை சிக்ஸருக்கு கிடாசி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இதனால் இரு அணிகளின் ஸ்கோரும் சமன் ஆனது.

எனவே இன்னும் 15 பந்துகளில் ஒரு ரன் அடித்தால் போதும். அப்போது சிங்கிள் அடிக்காத தினேஷ் திடீரென லெக் திசையில் பலமான சிக்ஸரை பறக்கவிட்டு, இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்தார். அவரின் கடைசி சிக்ஸர் வெற்றியானது, ரசிகர்கள் அனைவருக்கும் 2011ஆம் ஆண்டு கேப்டன் எம்.எஸ்.தோனி அடித்த சிக்ஸரை நினைவுக்கூர்ந்தது. "Dhoni finishes off in style! India lift the world cup" என்ற அதே வார்த்தை இன்றும் ரசிகர்கள் மனதில் அலைப்பாயந்தது.

 

இதில் சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால், தோனியை போன்றே இன்று சிக்ஸர் அடித்த இளம் வீரர் தினேஷ் பானாவும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகும். அவர் அடித்த ஷாட்டும் தோனி அடித்த அதே திசையில் அடிக்க முயற்சித்தது தான். எனவே தோனியை போன்றே எதிர்காலத்தில் உருவெடுப்பார் என ரசிகர்கள் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை