‘கிரிக்கெட் பற்றி எழுதுவதை நிறுத்துங்கள்' - பத்திரிக்கையாளரை கண்டித்த கெவின் பீட்டர்சன்!

Updated: Fri, Feb 14 2025 11:54 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடியது. இதில் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணியானது, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் படுமோசமான தோல்வியைத் தழுவி ஒயிட்வாஷும் ஆனது. 

மேற்கொண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் இங்கிலாந்து அணி இவ்வாறு அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் கேப்டன் ஜோஸ் பட்லாரின் முடிவுகள் மற்றும் பேட்டர்கள் சோபிக்க தவறியது, பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியது, ஃபீல்டிங்கில் சொதப்பியது என ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணி சோபிக்கா தவறியுள்ளது. 

இதனால் அந்த அணி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இங்கிலாந்து அணி வீரர்கள் பேட்டிங் பயிற்சியைத் தவிர்த்து கோல்ஃப் பயிற்சியில் ஈடுபட்டதே இந்த படுதோல்விக்கு காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சென் ஆகியோர் காடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். 

இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர், ரவி சாஸ்திரி மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோரின் கருத்துகளை மறுக்கும் வகையிலும், இங்கிலாந்தின் முடிவை ஆதரிக்கும் வகையிலும் செய்தி வெளியிட்டிருந்தார். ஆனால் அந்த பத்திரிகையாளர் இங்கிலாந்து அணியைப் பாதுகாக்க முயன்றபோது, ​​பீட்டர்சன் அந்த பத்திரிகையாளரையும் கடுமையாகக் கண்டித்ததுடன், இனி அந்த் பத்திரிகையாளர் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று கண்டித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இங்கிலாந்து அணி பயிற்சியில் ஈடுபடாதது பற்றி சாஸ்திரியும் நானும் தவறு செய்ததாக ஒரு முன்னணி இங்கிலாந்து பத்திரிகையாளர் கூறியதாக ஒரு கட்டுரை அனுப்பப்பட்டது. மேலும் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி செய்யாததற்கான காரணமாக அவர், வீரர்களின் காயங்கள் மற்றும் ஆட்டங்களுக்கு இடையேயான நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டிருந்தார்.

 

எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்! இதுபோன்ற குப்பைகளை எழுதப் போகிறீர்கள் என்றால் கிரிக்கெட்டைப் பற்றி எழுதுவதை நிறுத்துங்கள். காயங்கள் விளையாட்டின் ஒரு பகுதியாகும், இந்த அட்டவணை கிட்டத்தட்ட எப்போதும் விளையாடப்படும் ஒவ்வொரு இருதரப்பு தொடரையும் போன்று தான் தயார் செய்யப்பட்டிருந்தது.காயங்கள் பேட்டர்களை நெட் பவுலர்களுக்கு எதிராக பேட்டிங் செய்வதையும், சுழல் விளையாடும் கலையைக் கற்றுக்கொள்வதையும் தடுக்காது.

Also Read: Funding To Save Test Cricket

அவர்கள் முன்னேற வேண்டிய இடம் அதுதான்! இதில் என்னை நம்புங்கள், ஏனெனில் இது என் வாழ்க்கையை சுழல் பந்து வீச்சிலிருந்து காப்பாற்றியது! நாம்பை மூளைச்சலவை செய்ய முயற்சிக்கும் விஷயங்களில் பத்திரிகையாளர்கள் கூட்டுச் சேர்ந்திருப்பதாகத் தெரிகிறது. ரசிகர்களை இப்படி ஏமாற்ற மாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவரின் பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை